ஸ்ரீவில்லிபுத்தூர் - Srivilliputhur

ஸ்ரீவி: காரும் இருசக்கர வாகனமும் நேருக்குநேர் மோதல்..ஒருவர் பலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காரும் இருசக்கர வாகனமும் மோதிக்கொண்ட விபத்தில் ஒருவர் சம்பவ இடத்திலேயே பலியானார். நகர் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.  விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் மதுரை கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் பிள்ளையார் நத்தம் விலக்கு அருகில் மேலதொட்டி பெட்டையைச் சேர்ந்த பூசையா என்பவர் இருசக்கர வாகனத்திற்கு நேற்று ஏப்.4 இரவு பெட்ரோல் நிரப்பும் போது, ஸ்ரீவில்லிபுத்தூரில் இருந்து மதுரை நோக்கிச் சென்ற கார் இருசக்கர வாகனத்தில் மோதியதில் சம்பவ இடத்திலேயே பூசையா என்பவர் உயிரிழந்தார்.  இவரது உடலை கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வீடியோஸ்


விருதுநகர்