விருதுநகர் மாவட்டம். ஶ்ரீவில்லிபுத்தூரில் தெரு நாய்களுக்கு வெறி நோய் தடுப்பூசி முகாம்.
விருதுநகர் மாவட்ட கால்நடை துறை மற்றும்
ஸ்ரீவில்லிபுத்துார் நகராட்சி சார்பில் தெரு நாய்களுக்கான வெறி நோய் தடுப்பூசி முகாம் நகரின் முக்கிய பகுதி மற்றும் தெருக்களில் நடைப்பெற்றன.
ஸ்ரீவில்லிபுத்தூர் நகராட்சி கமிஷனர் பிச்சைமணி, சுகாதார பிரிவு அலுவலர்கள் தலைமையில் கால்நடை மருத்துவர் சுப்ரமணியன் தலைமையிலான குழுவினர் தெருகள் மற்றும் பொது இடங்களில சுற்றி திரிந்த 40க்கு மேற்பட்ட நாய்களுக்கு நோய் தடுப்பூசி போட்டப்பட்டனர். மேலும் ஆணையாளர் கூறுகையில்: நகராட்சிக்குட்பட்ட அனைத்து வார்டுகளில் சுற்றும் நாய்களுக்கு நோய் தடுப்பூசி போடப்படும் என்றார்.