ஸ்ரீவி. மத்தியஅரசைதட்டி கேட்ககூடியவர்தமிழக முதல்வர்தான் KKSSR

53பார்த்தது
இந்தியாவிலேயே மோடி அரசாங்கத்தை தட்டிக் கேட்க கூடிய ஒரே தலைவர் தமிழக முதல்வர் ஸ்டாலின் மட்டும்தான் என
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்த தமிழக முதல்வர் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டத்தில் அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன் பேச்சு. எதையும் காதில் வாங்காத செவிட்டு அரசாங்கமாக மத்திய அரசு உள்ளதாக கடும் விமர்சனம்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே வத்திராயிருப்பு என்றிய திமுக சார்பாக மகாராஜபுரத்தில் தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், சிறப்புரையாற்றினர். அப்போது கூட்டத்தில் பேசிய அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் ராமச்சந்திரன், எந்தக் கட்சியாக இருந்தாலும் ஆளுங்கட்ச்சியாக ஆன பின்பு 10 முதல் 20 சதவீதம் வரை செல்வாக்கு குறையும். ஆனால் திமுக அரசிற்கு ஆளுங்கட்சியான பின்பு வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அதற்கு காரணம் பொதுமக்களாகிய நீங்கள். தமிழக முதல்வரை சகோதரராக நீங்கள் நேசிக்கிறீர்கள். இதுவரை 90 சதவீத வாக்குறுதிகளை திமுக அரசு நிறைவேற்றி உள்ளது. வருகின்ற 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவிற்கு மிகப்பெரிய வெற்றியை நீங்கள் கொடுக்க வேண்டுமென்றார். கூட்டத்தில் ஆண், பெண் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி