விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் கோர்ட்டில் மாவோயிஸ்டுகள் ஆஜர்.
சிவகாசியைச் சேர்ந்த கணேஷ் என்பவரின் அடையாள அட்டையை போலியாக கொடுத்து கடந்த 2016-ம் ஆண்டு சிம்கார்டுகள் வாங்கிய வழக்கில் கேரளாவை சேர்ந்த மாவோயிஸ்டுகள் சைனி (வயது 35), அனுப்மேத்யூ சார்ஜ் (42) ஆகிய 2 பேரையும் சிறப்பு பிரிவு போலீசார் கைது செய்து கோவை சிறையில் அடைத்தனர். இந்த வழக்கு குறித்த விசாரணை ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட கோர்ட்டில் வழக்கு நடைபெற்று வருகிறது. இந்தநிலையில் நேற்று மாலை ஏப். 9, அவர்கள் 2 பேரையும் போலீசார் மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் முன்னிலையில்
ஆஜர்படுத்தினார். மேலும் இந்த வழக்குவிசாரணையை ஜூன் 4-ந் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.