ஸ்ரீவி: பௌணர்மியை முன்னிட்டுசதுரகிரி மலையில்குவிந்த பக்தர்கள்

56பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூர் அடுத்த சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் பங்குனி மாத பெளணர்மியை முன்னிட்டு குவிந்த பக்தர்கள் கூட்டம்.
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் மாதம், மாதம் நடைபெறும் பிரதோஷம், பௌணர்மி மற்றும் அமாவாசை தினத்தன்று சதுரகிரி மலைக்கு சென்று பக்தர்கள் வழிபடுவது வழக்கம். அதைப்போல் இன்று பங்குனி மாத பெளணர்மியை முன்னிட்டு இன்று பக்தர்கள் காலை முதல் மதியம் வரை மலையேறி பக்தர்கள் செய்து வந்தனர். மேலும் பக்தர்களுக்கு வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகம் சார்பாக பிளாஸ்டிக் பொருட்கள் தடை விதித்தும் மற்றும் நீர் ஓடைகளில் குளிக்கவும், மலை மீது தங்கவும் தடை விதித்து உள்ளனர். அதைப்போல் திடீரென மழைவந்தால் நீர் ஓடைகளில் நீர்வரத்து அதிமாக வந்தால் மலையேற தடை விதிக்க மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும் இன்று விடுமுறை தினம் என்பதால் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது என்பது குறிப்பிடதக்கது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி