ஸ்ரீவி: திருகல்யாண உற்சவ விழா. திரளான பக்தர்கள் பங்கேற்பு....

85பார்த்தது
ஸ்ரீவில்லிபுத்தூரில் கோலாகலமாக நடந்த ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண உற்சவம்
விருதுநகர் மாவட்டம்,
ஸ்ரீவில்லிபுத்தூரில ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் உற்சவம் கோலாகலமாக நடைபெற்றது. 108 வைணவ திவ்ய தேசங்களில் 90-வது ஸ்தலமான ஸ்ரீவில்லிபுத்தூர் பெரியாழ்வார், ஆண்டாள் ஆகிய இரு ஆழ்வார்கள் அவதரித்த சிறப்புக்குறியது. பெரியாழ்வாரின் மகளான ஆண்டாள் பெருமாளை போற்றி திருப்பாவை மற்றும் நாச்சியார் திருமொழி ஆகிய இரு தொகுப்புகளை பாடியுள்ளார். மார்கழி மாதத்தில் பாவை
நோன்பிருந்த ஆண்டாள் பங்குனி உத்திர நாளில் ரெங்கமன்னாரை திருமணம் செய்து கொண்டார். அதன் படி ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்தில் ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாண திருவிழா நடைபெறும். இந்த ஆண்டு திருக்கல்யாண திருவிழா கடந்த ஏப் 3-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. நேற்று இரவு ஏப் 11 ஆண்டாள் சன்னதி முன் உள்ள ஆடிப்பூர கொட்டகையில் உள்ள மணப்பந்தலில் ரெங்கமன்னார் எழுந்தருளிய பின் பெரியாழ்வார் பூர்ண கும்பத்துடனும், ஸ்ரீஆண்டாள் அங்கமணிகளுடன் புறப்பாடாகி மணப்பந்தலில் எழுந்தருளினார். தொடர்ந்து ரெங்கமன்னாருக்கு பெரியாழ்வார் ஆண்டாளை கன்னிகா தானம் வழங்கும் வைபவம் நடைபெற்றது.
பின்னர் திவ்ய தம்பதிகளான ஆண்டாள் ரெங்கமன்னார் திருக்கல்யாணம் வெகு விமரிசையாக நடைபெற்றது. திருகல்யாண விழா கலந்த கொண்ட 15 ஆயிரம் பேருக்கு விருந்து வழங்கப்பட்டது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி