ஸ்ரீவி: குருத்தோலை ஞாயிறு விழா..திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்பு

81பார்த்தது
விருதுநகர் மாவட்டம். ஸ்ரீவில்லிபுத்தூர் திரு இருதய ஆலயத்தில் ஐக்கிய கிறிஸ்துவ குருத்தோலை ஞாயிறு கொண்டாட்டம். இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்டு மூன்றாம் நாள் உயிர்த்தெழுந்த நாளை கிறிஸ்தவர்கள் உயிர்த்தெழுதல் நாளாகவும் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடி வருகிறார்கள். 

இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படுவதற்கு முன்பாக 40 நாட்கள் உபவாசம் இருந்த நாட்களை தவக்காலமாகவும், அந்த நாட்களின் கடைசி ஞாயிற்றுக்கிழமை குருத்தோலை ஞாயிறாக கடைப்பிடித்து வருகின்றனர். அதன்படி குருத்தோலை ஞாயிறான இன்று திரு இருதய ஆலயத்தில் பேராயர் வால் தினகரன் தலைமையில் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. தவக்காலத்தில் இருந்த இயேசுநாதர் எளியவர் வலியவர் என இருக்கும் அனைவரும் சமம் என்பதை உலக மக்களுக்கு அறிவுறுத்துவதற்காக கழுதையில் ஊர்வலமாக வந்தார் அதை நினைவுகூறும் வகையில் புனித திரு ஆலயத்தைச் சேர்ந்த சிறுமி ரியா பிரியதர்ஷினி கழுதை மீது அமர்ந்து ஊர்வலமாக வந்தார். 

அவரைத் தொடர்ந்து கிறிஸ்தவர்கள் தென்னை ஓலையான குருத்தோலையை கையிலேந்தி பள்ளியின் முன்பிலிருந்து ஓசானா என்னும் பாடலை பாடியபடி நகரின் முக்கிய வழியாக வலம் வந்து திரு இருதய ஆலயத்திற்கு வந்தடைந்தனர். அதன்பின்பு திருப்பலி நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் திரளானவர்கள் கலந்து கொண்டு குருத்தோலை ஞாயிறை கொண்டாடினர்.

தொடர்புடைய செய்தி