சிவகாசி: அம்மன் வீதி உலா.. பக்தர்கள் தரிசனம்
சிவகாசி ஸ்ரீபத்திரகாளியம்மன், ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள் வீதியுலா. விருதுநகர் மாவட்டம், சிவகாசியில் இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டுக்கு சொந்தமான ஸ்ரீபத்திரகாளியம்மன் கோவில் மற்றும் ஸ்ரீமாரியம்மன் கோவிலில் இன்று, ஐப்பசி மாத பௌர்ணமி மற்றும் ஐப்பசி மாத மாதாந்த வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஸ்ரீபத்திரகாளியம்மன் - ஸ்ரீமாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்றன. அதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளிய ஸ்ரீபத்திரகாளியம்மன் - ஸ்ரீமாரியம்மன் சுவாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் மற்றும் அர்ச்சனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இதனை அடுத்து ஸ்ரீபத்திரகாளியம்மன் - ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள் ஒரே தேரில் எழுந்தருளி வீதியுலா வந்தது சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து, சோலை காலனியில் உள்ள இந்து நாடார்கள் உறவின்முறைக்கு சொந்தமான திருமண மண்டபத்தில் ஸ்ரீபத்திரகாளியம்மன் - ஸ்ரீமாரியம்மன் சுவாமிகள் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி கொடுத்தனர். இன்று இரவு சுவாமிகள் இருவரும் தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு காட்சி கொடுப்பார்கள். நிகழ்ச்சி ஏற்பாடுகளை சிவகாசி இந்து நாடார்கள் உறவின்முறை மகமைப்பண்டு தேவஸ்தான நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர்.