இராசபாளையம் - Rajapalayam

விருதுநகர்: தமிழக முதல்வரின் சிறப்புரை

முதல்வர் முக ஸ்டாலின் பேச்சு: விருதுநகர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த ஆயத்த ஆடை தொழிற் பூங்கா அமைக்கப்பட்டு வருகிறது என்றும், மாவட்டம் முழுவதும் 1286 கிராமங்களுக்கு 1387 கோடியே 71 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கூட்டு குடிநீர் திட்டம் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்பட்டு வருவதாகவும், அனைத்து வளர்ச்சி திட்டங்களை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். உயர்கல்வியில் சேருவோர் இந்திய அளவில் 33% பேர் என்றும் அதுவே தமிழக அளவில் 66% என்றும் கூறினார். பட்டாசு விபத்தில் பெற்றோரை இழந்த குழந்தைகளின் உயர்கல்வி வரையிலான படிப்பு செலவை அரசே ஏற்கும், இதற்காக விருதுநகர் மாவட்ட ஆட்சியரை தலைமையாக கொண்டு தனி நிதியம் ஆரம்பிக்கப்பட்டு முதல்கட்டமாக ரூ 5 கோடி ஒதுக்கப்படும் என்றார். திமுக ஆட்சியில் இதுவரை 10 லட்சம் பேருக்கு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டுள்ளது. நில உரிமையை வழங்கும் ஆட்சியாக திராவிட மாடல் திமுக ஆட்சி செயல்பட்டு வருகிறது என்றும், உங்கள் முகங்களில் தெரியும் மகிழ்ச்சியே தனக்கு பாராட்டு என்றார்.

வீடியோஸ்


விருதுநகர்