

இராஜபாளையம்: நூதன முறையில் மோசடியில் ஈடுபட்ட 2 பேர் கைது....
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையத்தில் குறைந்த விலையில் தங்கம் தருவதாக கூறி ரூ. 48 லட்சம் மோசடி. இருவர் கைது. தலைமறைவான குற்றவாளிக்கு வலை வீச்சு. மதுரை சேர்ந்த முத்துக்குமார், இவர் ஆன்லைனில் தங்கக்கட்டி இருப்பதாக கூறி அது விற்பனைக்கு தயாராக இருப்பதாக மோசடியான விளம்பரம் செய்ததை பார்த்து இராஜபாளையத்தை சேர்ந்த முத்துக்குமார் என்பவர் செல்போனில் தொடர்பு கொண்ட போது, நேரடியாக ராஜபாளையம் பஞ்சு மார்க்கெட் பகுதிக்கு வந்தால் தங்கக்கட்டியை கொடுத்து விடுவதாக தெரிவித்தார். அதன்பேரில் ரூ. 48 லட்சம் எடுத்துக்கொண்டு முத்துக்குமார், பஞ்சு மார்க்கெட் பகுதிக்கு சென்றார். அப்போது கையில் ரூ. 48 லட்சம் பெற்றுக்கொண்டு, தங்கக்கட்டியை நகைக்கடையில் சோதனை செய்து பின்னர் நீங்கள் பெற்றுக்கொள்ளலாம் என்று கூறி நண்பர் கருப்பையா உடன் அனுப்பி தங்கக்கட்டியை சோதனை செய்து அவரிடம் கொடுத்து விடுமாறு கூறினார். இருவரும் ஒரு ஆட்டோவில் ராஜபாளையத்தில் உள்ள நகைக்கடைக்கு முத்துக்குமார் செல்லவும், கருப்பையா தங்கக்கட்டியுடன் நண்பர் கண்ணனுடன் இருசக்கர வாகனத்தில் ஓட்டம் பிடித்தார். பின்னர் அதிர்ச்சி அடைந்த முத்துக்குமார் ராஜபாளையம் வடக்கு காவல் நிலையத்தில் புகார் செய்தார். தனிப்படை குற்றப்பிரிவு போலீசார் செல்போன் எண்களை வைத்து அடையாளம் கண்டறிந்த போது பைக்கில் தப்பி ஓடிய கருப்பையா, கண்ணன் இருவரும் பிடிபட்டனர். தலைமறைவான குற்றவாளியை தேடி வருகின்றனர்.