இராஜபாளையம்: தனிநபர் சாலை அமைக்க பொதுமக்கள் எதிர்ப்பு

71பார்த்தது
விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் அருகே கண்மாய் நீர்வரத்து கால்வாயில் சாலை அமைப்பதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். ராஜபாளையம் அருகே மேல ராஜகுலராமன் ஊராட்சிக்கு உட்பட்ட திருக்கோதையாபுரம் செங்குளம் கண்மாய் மூலம் 200 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. இப்பகுதியில் தனிநபர்கள் சார்பில் உருவாக்கப்பட்டு வரும் பிளாட்டுகளுக்கு செல்வதற்காக கண்மாய் நீர்வரத்து ஓடையை ஆக்கிரமித்து பாதை ஏற்படுத்தி சாலை அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. 

இதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மேலும் மழைக்காலங்களில் மழைநீர் கால்வாய் நிறைந்து தற்போழுது அமைக்கப்பட்டுள்ள சாலை வழியாக விளைநிலங்கள் மற்றும் குடியிருப்புகளுக்குள் தண்ணீர் புகும் அபாயம் ஏற்படும் என்றும், கால்வாய் அருகே வசிக்கும் 400க்கும் மேற்பட்ட குடியிருப்புவாசிகள் இதனால் பாதிக்கப்படுவர் என்பதால் நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியருக்கு அப்பகுதி மக்கள் கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

தொடர்புடைய செய்தி