விருதுநகர் கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் 09.03.2025 முதல் நந்தா ஹோட்டல் முதல் ஆத்துப்பாலம் வரை பயணிகள் பேருந்து No-entry ஆக மாற்றம் செய்யப்பட்டுள்ளது - மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., அவர்கள் தகவல்.---விருதுநகர் நகரின் மேற்கு மற்றும் தெற்கு பகுதியில் இருந்து வரும் அனைத்து பேருந்துகளும் நந்தா ஹோட்டல் சர்வீஸ் ரோடு மற்றும் எம்.ஜி.ஆர் சாலை வழியாக கர்மவீரர் காமராஜர் புதிய பேருந்து நிலையம் வந்து, அங்கிருந்து கோவில்பட்டி மார்க்கமாக செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், மதுரை செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சிலை ஆத்துப்பாலம் டி.டி.கே ரோடு வழியாகவும், அருப்புக்கோட்டையில் இருந்து இராஜபாளையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, புதிய பேருந்து நிலையம், எம்.ஜி.ஆர் சாலை வழியாகவும், இராஜபாளையத்தில் இருந்து அருப்புக்கோட்டை, இராமநாதபுரம், இராமேஸ்வரம், செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக, புதிய பேருந்து நிலையம் வந்து எம்.ஜி.ஆர் சிலை வழியாக அருப்புக்கோட்டை மேம்பாலம் வழியாகவும், பழைய பேருந்து நிலையம் செல்லும் அனைத்து பேருந்துகளும் எம்.ஜி.ஆர் சிலை, ஆத்துப்பாலம், டி.டி.கே ரோடு வழியாக செல்ல வேண்டும். எம்.ஜி.ஆர் சிலை வழியாக புதிய பேருந்து நிலையம் வந்து, செல்லும் பேருந்துகள் எம்.ஜி.ஆர் சாலை வழியாக செல்ல வேண்டும்.