இராசபாளையம் - Rajapalayam

ராஜபாளையம்: பால் வியாபாரி அடித்துக்கொலை.. விசாரணை பிடியில் மகள், மனைவி

ராஜபாளையம் அடுத்த எம். பி. கே புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த பால் வியாபாரி சுப்பிரமணியம் (60), இவரது மனைவி ஈஸ்வரி, மகள் தேவயானி (27). தேவயானியை கார்த்திக் என்பவருக்கு சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து வைத்திருந்தனர். மேலும் தேவயானிக்கும் கார்த்திக்கும் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்து, தேவயானி பெற்றோர் வீட்டிற்கு குழந்தைகளுடன் குடியிருந்து வருகிறார்.  இந்நிலையில், பலமுறை கார்த்திக் வந்து மனைவியும் குழந்தைகளையும் அழைக்க வந்தபோது சுப்பிரமணியம் அனுப்பி வைக்க மறுத்து நிலையில், மனைவி ஈஸ்வரியும் மகள் தேவயானியும் போக மறுத்து தகராறு செய்து வந்தனர். இது குறித்து சுப்பிரமணியக்கும் அவரது மனைவி மற்றும் மகளுடன் அடிக்கடி வாக்குவாதம் ஏற்பட்டு பிரச்சனை இருந்து வந்ததாக கூறப்படுகிறது.  இந்நிலையில் திடிரென சுப்பிரமணியம் வீட்டின் உத்தரத்தில் தூக்கில் தொங்கியவாறு காணப்பட்டார். அவரது உடலை அக்கம், பக்கத்தினர் மீட்ட போது உடலில் பல இடங்களில் காயங்கள் மற்றும் வீடு முழுவதும் ரத்தம் சிதறி கிடந்தன. மேலும் இறந்தவரின் தம்பி சஞ்சீவி வடக்கு காவல் நிலையத்தில் தனது அண்ணன் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தகவல் கூறி, அதன் பேரில் வடக்கு போலீசார் விரைந்து சென்று சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்கு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

வீடியோஸ்


விருதுநகர்