விருதுநகர்: மாற்றுத்திறனாளி வாகனத்தின் மீது கார் மோதி விபத்து

84பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தாலுகாவை சார்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகன் முருகதாஸ் இவர்கள் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ராஜேந்திரன் என்பவருக்கு மாற்று திறனாளி நலத்துறை சார்பில் மூன்று சக்கர வாகனம் வழங்கப்பட்டது அதை வாங்கிவிட்டு விருதுநகர் சாத்தூர் தேசிய நெடுஞ்சாலையில் ஹோலி கிராஸ் மருத்துவமனை பகுதியில் சென்று கொண்டிருந்த பொழுது ராஜேந்திரன் அந்த மூன்று சக்கர வாகனத்தை ஓட்டி வந்துள்ளார் அப்பொழுது அவருடைய மகன் முருக தாஸ் பின்னால் அமர்ந்திருந்ததாகவும் அந்த வாகனத்தின் மீது திருநெல்வேலி சார்ந்த டெஸ் மந்த் என்பவர் ஓட்டி வந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது இதில் ராஜேந்திரன் மற்றும் அவருடைய மகன் ஆகிய இருவருமே காயம் அடைந்த நிலையில் இந்த விபத்து குறித்து சூலக்கரை காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி