*அருப்புக்கோட்டை நகர் பகுதியில் அரை மணி நேரத்துக்கு மேலாக பெய்த மழை காரணமாக காரணமாக குளிர்ச்சியான சூழல் நிலவுவதால் பொதுமக்கள் மகிழ்ச்சி*
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த சில தினங்களாகவே வெயிலின் தாக்கம் அதிகரித்து இருந்தது. இதனால் பகல் நேரங்களில் பொதுமக்கள் வீடுகளில் இருந்து வெளியே வர தயக்கம் காட்டினர். இந்நிலையில் இன்று காலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில் பிற்பகல் விலையில் கருமேகங்கள் சூழ்ந்து அருப்புக்கோட்டை நகர் பகுதியில் சுமார் அரை மணி நேரம் பரவலான மழை பெய்தது. திடீரென பெய்த மழை காரணமாக அருப்புக்கோட்டை நகர் தொகுதி முழுவதும் குளிர்ச்சியான சூழல் நிலவுகிறது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் பல இடங்களில் தாழ்வான பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல அருப்புக்கோட்டை சுற்றுவட்டார பகுதியில் பாளையம்பட்டி, பந்தல்குடி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மிதமான மழை பெய்தது.