இராஜபாளையம்: புகையிலை விற்பனை செய்த கடைக்கு அதிகாரிகள் சீல்..

75பார்த்தது
விருதுநகர் மாவட்டம், இராஜபாளையம் அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்ற கடைக்கு அதிகாரிகள்'சீல்'.
விருதுநகர் மாவட்ட கலெக்டர் ஜெயசீலன் உத்தரவின் பேரில் விருதுநகர் உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் செல்வராஜ், ராஜபாளையம் உணவு பாதுகாப்பு அலுவலர் ராஜேந்திரன் ஆகியோர் ராஜபாளையம் அடுத்த சங்கரபாண்டியபுரம் கிராமத்தில் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர். அப்போது சங்கரபாண்டியபுரம் பகுதியில் மயில்சாமி என்பவரது பெட்டிக்கடையில் சோதனை செய்தபோது அங்கு தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கைப்பற்றப்பட்டன. இதையடுத்து கடையின் உரிமையாளா மயில்சாமிக்கு ரூ. 25 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு, அவர் நடத்தி வந்த கடைக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி