தமிழ்நாடு கிராம வங்கியில் கொள்ளை முயற்சி;

55பார்த்தது
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை தெற்கு தெருவில் தமிழ்நாடு கிராம வங்கி அமைந்துள்ளது. இங்கு ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ள நிலையில் ஏராளமானோர் தங்களது தங்க நகைகளையும் அடகு வைத்துள்ளனர்.
இந்நிலையில் இன்று அதிகாலை நேரத்தில் இந்த வங்கியின் பக்கவாட்டில் உள்ள சந்தில் நுழைந்த மர்ம நபர்கள் அங்கு உள்ள ஜன்னலில் இருந்த மூன்று கம்பிகளை மட்டும் அறுத்து வங்கியின் உள்ளே நுழைந்து உள்ளே நுழைந்து கொள்ளை முயற்சியில் ஈடுபட முயன்றுள்ளனர். அப்போது கொள்ளையன் ஒருவன் வங்கியின் உள்ளே நுழைந்து கேமரா வயர் இணைப்பை துண்டிக்க முயன்ற போது வங்கியில் பொருத்தப்பட்டிருந்த அலாரம் ஒலித்ததால் கொள்ளை முயற்சியை கைவிட்டு அங்கிருந்து கொள்ளையர்கள் தப்பி ஓடினர். இந்த கொள்ளை சம்பவம் குறித்து வங்கி மேலாளர் சுரேஷ்குமார் புகாரின் பேரில் நகர் குற்றப்பிரிவு போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களை சேர்த்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இந்த வங்கியில் ஏற்கனவே இதே போல இரண்டு முறை கொள்ளை முயற்சி நடந்து இருப்பது குறிப்பிடத்தக்கது. வங்கி அலாரம் ஒலித்ததால் வங்கியில் இருந்த கோடிக்கணக்கான பணம் மற்றும் நகைகள் தப்பியது. இந்த சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி