2018ம் ஆண்டு அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக, அமைச்சர் சிவசங்கர் உள்ளிட்டோர் மீது அரியலூர் போலீசாரால் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதேபோல, கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலின் போது தேர்தல் விதிமுறைகளை மீறியதாக, அமைச்சர் பெரிய கருப்பன் மீது சிவகங்கை மாவட்டம், கண்டவராயன்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்குகளை ரத்து செய்யக்கோரி அமைச்சர்கள் மனுதாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில், அமைச்சர்கள் மீதான வழக்கு ரத்து செய்யப்பட்டுள்ளது.