இனி WWE போட்டிகளை டிவியில் பார்க்க முடியாது

64பார்த்தது
இனி WWE போட்டிகளை டிவியில் பார்க்க முடியாது
பிரபல மல்யுத்த போட்டிகளான WWE போட்டிகள் இனி ஏப்ரல் 1ஆம் தேதி முதல் தொலைக்காட்சி டிவி சேனல்களில் பார்க்க முடியாது என்ற அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இதனால் இந்திய ரசிகர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். உலகமே தொலைக்காட்சியை விட்டு ஓடிடி-க்கு மாறியுள்ள நிலையில், WWE போட்டிகளும் இனி, நெட்ஃபிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பப்படும் என அதன் முக்கிய நிர்வாகியான ட்ரிபிள் ஹெச் கூறியுள்ளார். ஏற்கனவே ஜனவரி முதல் அமெரிக்காவில் நெட்ஃபிளிக்ஸில் WWE ஒளிபரப்பப்படுகிறது.

தொடர்புடைய செய்தி