சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்தின் மீது முதல்வர் பேசியதை ஒளிபரப்பினார்கள். நான் பேசியதை ஒளிபரப்பவில்லை. ஆளுநர் உரையின் மீது பேரவையில் நான் 2 மணி நேரம் 52 நிமிடங்கள் பேசினேன். நான் பேசியதில் 40 நிமிடங்களை மட்டுமே சிடியில் பதிவு செய்து கொடுத்தனர். அளிக்கப்பட்ட சிடியில் பெரும்பாலான நேரம் முதல்வர், அமைச்சர்கள் பேச்சு மட்டுமே இருந்தது என எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி
பழனிசாமி குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.