இந்தியாவில் ஸ்மார்ட்போன் சந்தைகளை மிரளவைக்கும் வகையில் ரியல்மி பி3 5ஜி (Realme P3 5G) போன் களமிறங்கி இருக்கிறது. 6.67 இன்ச், அமோலெட் (AMOLED) டிஸ்பிளே உள்ளது. மேலும், 6000mAh பேட்டரி, 45W ஃபாஸ்ட் சார்ஜிங், 50 எம்பி மெயின் கேமரா போன்ற பீச்சர்கள் உள்ளன. இந்த போனின் ஜிபி, ரேம் ஆகியவையின் அடிப்படையில் ரூ.16,999 முதல் ரூ.19,999 வரை விற்பனையாகவுள்ளது. அறிமுக சலுகையில் ரூ.2000 டிஸ்கவுண்ட் கொடுக்கப்பட இருக்கிறது. வருகிற மார்ச் 19ஆம் தேதி முதல் விற்பனைக்கு கிடைக்க இருக்கிறது.