6 பாலுக்கு 6 சிக்சர்.. அதிரடி காட்டிய இலங்கை வீரர்

64பார்த்தது
கிரிக்கெட்டில் ஒரே ஓவரில் 6 சிக்சர் அடித்து இந்திய வீரர் யுவராஜ் சிங் சாதனை படைத்தார். அவரைத் தொடர்ந்து, வீரர்கள் கிப்ஸ், பொல்லார்டு ஆகியோரும் இந்த சாதனையை படைத்தனர். இந்த நிலையில், தற்போது அவர்களது வரிசையில், இலங்கை வீரர் திசர பெரேராவும் இணைந்திருக்கிறார். ஆசிய லெஜண்ட்ஸ் லீக் தொடரில் விளையாடிய திசர பெரேரா, ஒரே ஓவரில் 6 சிக்சர்களை விளாசி அதிரடி காட்டியுள்ளார். மொத்தம் 36 பந்துகளில் 108 ரன்கள் அடித்துள்ளார்.

நன்றி: allt20.official

தொடர்புடைய செய்தி