இப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் பங்கேற்பு

55பார்த்தது
*அண்ணா காலத்திலிருந்து தற்போது வரை திமுகவினர் தொடர்ந்து மைனாரிட்டி சமுதாய மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள் - அருப்புக்கோட்டையில் இப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சியில் அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ பேச்சு*

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பெரிய பள்ளிவாசல் முன்பு திமுக சிறுபான்மை நலப்பிரிவு சார்பில் இப்தார் நோன்பு திறப்பு விழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் தமிழக வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌ கலந்துகொண்டு இப்தார் நோன்பை திறந்து வைத்து இஸ்லாமிய மக்களுடன் இணைந்து நோன்பு கஞ்சி அருந்தினார். முன்னதாக இஸ்லாமிய மக்கள் அமைச்சருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த இப்தார் நோன்பு திறப்பு விழா திற்பு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன்‌,

50 வருடமாக நான் உங்களுடன் இருக்கிறேன் நீங்களும் என்னுடனே இருக்கிறீர்கள் அண்ணா காலத்திலிருந்து தற்போது வரை திமுகவினர் தொடர்ந்து மைனாரிட்டி சமுதாய மக்களுக்காக குரல் கொடுப்பவர்கள். அந்த வகையில் உங்களோடு இந்த இப்தார் நோன்பு திறக்கும் நிகழ்ச்சியில் உங்களோடு கலந்து கொள்வதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன் என பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் திமுக நிர்வாகிகள் ஜமாத் நிர்வாகிகள் இஸ்லாமியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி