தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. இலவசமாக வழங்கிய விவசாயி

59பார்த்தது
தக்காளி விலை கடும் வீழ்ச்சி.. இலவசமாக வழங்கிய விவசாயி
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகேவுள்ள அல்லாளபுரம் பகுதியைச் சேர்ந்த செந்தில்குமார் (40) என்ற விவசாயி, தனக்கு சொந்தமான 2 ஏக்கர் நிலத்தில் ஒரு லட்சம் ரூபாய் செலவில் தக்காளி விதைத்துள்ளார். தக்காளி விலை உயரும் என்ற நம்பிக்கையில் இருந்துள்ளார். ஆனால், தக்காளி விலை கடும் சரிவைக் கண்ட நிலையில் விளைந்த தக்காளிகளை மக்களுக்கு இலவசமாக வழங்கியுள்ளார். மேலும், எஞ்சியிருந்த தக்காளி செடிகளை நிலத்தோடு சேர்ந்து உழுத சம்பவம் அரங்கேறியுள்ளது.

தொடர்புடைய செய்தி