சிவகாசி அருகே முன்விரோதம் காரணமாக சுரேஷ் என்ற வாலிபர் வெட்டிக் கொலை. தப்பியோடிய கொலையாளிகளுக்கு போலீஸார் வலை வீச்சு.
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே திருத்தங்கல் ஆலாவூரணி பகுதியை சேர்ந்த பெருமாள் என்பவரின் மகன் சுரேஷ் (27). இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் கடந்தாண்டு திருத்தங்கலில் குணசேகரனை வெட்டிக் கொலை செய்த முன் பகை காரணமாக முனீஸ் நகரில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்துள்ளார். இன்று அதிகாலை வீட்டில் இருந்த சுரேஷை வீட்டிற்குள் புகுந்த 5 பேர் கொண்ட மர்ம கும்பல் அவரை சரமாரியாக வெட்டி படுகொலை செய்துவிட்டு தப்பியது. உடலை மீட்ட போலீசார் இவர் மீது பல்வேறு கொலை வழக்குகள் நிலுவையில் உள்ளதால் முன்விரோதம் காரணமாக கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலை வழக்கில் தொடர்புடைய தப்பியோடிய குற்றவாளிகளை மாரனேரி போலீஸார் வலைவீச்சு தேடி வருகின்றனர்.