தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பதை கண்டித்து, இன்று (மார்ச் 17) பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், போராட்டத்தில் பங்கேற்க முயன்ற பாஜக மூத்த தலைவர் ஹெ.ராஜாவை போலீசார் கைது செய்தனர். அப்போது, அவரை அங்கிருந்த போலீஸ் வாகனத்தில் ஏற கூறினர். வாகனத்தைப் பார்த்து ஆத்திரமடைந்த ஹெச். ராஜா, “நாய் ஏத்துற வண்டியில் நாங்க ஏன் ஏறணும்?” என கூறி போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.