நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே, கடந்த 15ஆம் தேதி நகைக்காக 90 வயது மூதாட்டியை கொடூரமாக கொலை செய்த 2 இளைஞர்களை போலீசார் கைது செய்துள்ளனர். தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது, வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த மூதாட்டி காதில் இருந்த இரண்டு கிராம் தங்கத்தோடை பறிக்க இளைஞர்கள் முயன்றுள்ளனர். மூதாட்டி கத்த தொடங்கியதால், அவரது முகம், மார்பு உள்ளிட்ட இடங்களில் தாக்கி கொலை செய்தது தெரியவந்துள்ளது.