தமிழக சட்டப்பேரவையில் இன்று (மார்ச். 17) பட்ஜெட் அறிக்கைகள் மீதான விவாதம் நடக்கும் நிலையில் அதிமுக உறுப்பினர் செங்கோட்டையன், "ஈரோடு முதல் கோபி வரை நான்கு வழிச்சாலைகள் விரிவுபடுத்தும் திட்டத்தில் புறவழிச்சாலையை ஏற்படுத்தும் திட்டம் இன்னும் நிறைவேற்றப்படவில்லை" என கூறினார். இதற்கு பதிலளித்த அமைச்சர் எ.வ.வேலு, "செங்கோட்டையனுக்கு பிடித்த மாதிரியான பதில், மானிய கோரிக்கையில் வரும்" என்றார்.