அனைத்து பள்ளிகளிலும் வரும் 26ம் தேதி பெற்றோர் - ஆசிரியர் கழக கூட்டத்தை நடத்த பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதில், Good touch, Bad touch குறித்தும், POCSO சட்டம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அண்மைக்காலமாக பள்ளிகளிலேயே மாணவ, மாணவிகளுக்கு எதிரான வன்கொடுமை சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதனைத் தடுக்கும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.