தமிழிசையை வீட்டு காவலில் வைக்க போலீசார் திட்டம்

68பார்த்தது
தமிழ்நாடு டாஸ்மாக்கில் ரூ.1,000 கோடி நிதி முறைகேடு நடந்திருப்பதை கண்டித்து, இன்று (மார்ச் 17) பாஜக சார்பில் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற திட்டமிட்டுள்ளது. இந்நிலையில், பாஜக மூத்த தலைவர் தமிழிசை சௌந்தரராஜனை வீட்டு காவலில் வைக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர். மேலும், அவரது வீட்டு வாசலில் போலீசார் குவிந்துள்ளனர். இதேபோல், பாஜக முக்கிய நிர்வாகிகள் வீடுகளிலும் போலீசார் குவிக்கப்பட்டு, அவர்களையும் வீட்டு காவலில் வைக்க உள்ளனர்.

நன்றி: polimernews

தொடர்புடைய செய்தி