வேலைவாய்ப்பு முகாம் குறித்து ஆய்வு கூட்டம்
திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி துறையின் சார்பில் திருப்பத்தூர் மாவட்டம் நிர்வாகம் மற்றும் வேலைவாய்ப்பு தொழில்நெறி வழிகாட்டு மையம் இணைந்து நடத்தும் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம். வருகின்ற சனிக்கிழமை 16. 11. 2024 திருப்பத்தூர் நகராட்சியில் சி விஜயசாந்தி ஜென் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற உள்ளது. அதன் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வு கூட்டம் ஆட்சியர் தலைமையில் நடைபெற்றது. உடன் மண்ட இணை இயக்குனர் லதா, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கஸ்தூரி, மற்றும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்கள் உடன் இருந்தனர்.