*விஜய் கட்சி தொடங்கியுள்ளதால் அதிமுகவும் திமுகவும் கூட்டணி சேர்ந்து விட்டார்களா என திருப்பத்தூர் பொதுமக்கள் மத்தியில் பேசப்படும் பொருளாக மாறிய திமுக அதிமுக கொடிகள். *
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து திருப்பத்தூர் திருவண்ணாமலை கூட்ரோடு அருகாமையில் உள்ள தனியார் துணிக்கடை வரை சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவிற்கு திமுக மற்றும் அதிமுக கொடிகள் அருகருகாமையில் மிக நெருக்கமாக நடப்பட்டிருந்ததால் அந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் விஜய் புதிய கட்சி தொடங்கி உள்ளதால் இருவரும் கூட்டணி சேர்ந்து விட்டார்களா என்றும் தமிழகத்தில் நாங்கள்தான் மாறி மாறி ஆட்சி செய்வோம் எங்களைத் தவிர வேறு யாரும் இல்லை என்று சொல்ல வருகிறார்களா இவர்கள் என்றும் பல தரப்பினர் பலவிதமாக பேசப்படும் பொருளாக மாறி உள்ளது.
ஆனால் திமுக சார்பாக 17 வது வார்டு நகர மன்ற உறுப்பினர் இல்லத் திருமண விழாவிற்கும் அதிமுக சார்பாக நாளை நடைபெற உள்ள அதிமுகவின் 53 ஆம் ஆண்டு துவக்க விழா பொதுக்கூட்டத்திற்கும் கொடிகள் கட்டப்பட்டிருப்பது தெரியாமல் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் மத்தியில் இந்தக் கொடிகள் பேசும் பொருளானது குறிப்பிடத்தக்கது.