திருப்பத்தூரில் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி மாணவர்கள்

79பார்த்தது
*திருப்பத்தூரில் முக்கிய அரசியல் தலைவர்களின் சிலைகள் உள்ள இடங்கள் வழியாகவும் காவல் நிலையம் நீதிமன்றம் வழியாகவும் ஊழல் மற்றும் லஞ்சம் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடத்திய பள்ளி மாணவர்கள் மற்றும் நாட்டு நலப்படி திட்ட மாணவர்கள். *

தமிழகம் முழுவதும் நேற்றைய தினம் முதல் ஒரு வாரத்திற்கு ஆங்காங்கே ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு துறை சார்பாக விழிப்புணர்வு வாரம் முன்னிட்டு லஞ்சம் மற்றும் ஊழலுக்கு எதிராக விழிப்புணர்வு பேரணிகளை நடத்தி வரும் நிலையில்.

திருப்பத்தூர் மாவட்ட ஊழல் மற்றும் கண்காணிப்பு துறை பிரிவு சார்பாக திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இருந்து சுமார் 100க்கும் மேற்பட்ட பள்ளி மாணவர்கள் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் கலந்து கொண்ட இந்த விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சியர் கொடி அசைத்து துவக்கி வைத்தார்.

தொடர்ந்து பள்ளி மாணவர்கள் லஞ்சம் வாங்குவதும் குற்றம் கொடுப்பதும் குற்றம் லஞ்சத்தை தவிர்த்து நெஞ்சை நிமிர்த்து ஊழல் ஒழிப்பு நாட்டை வல்லரசாக்கும் உள்ளிட்ட வாசகங்கள் பொருந்திய பதாகைகளை ஏந்தி கோஷங்கள் எழுப்பி காந்தி நேரு காமராசர் உள்ளிட்ட தேசத்தின் முக்கிய தலைவர்களின் சிலைகள் உள்ள முக்கிய வீதிகளில் மட்டுமின்றி காவல் நிலையம் நீதிமன்ற வளாகம் உள்ள வழியாகவும் விழிப்புணர்வு பேரணி சென்றனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி