*திருப்பத்தூரில் ஒரே நாளில் திடீரென பூக்களின் விலை உயர்ந்துள்ளதால் வெறிச்சோடி காணப்படும் பூ மார்க்கெட் ஒரு கிலோ மல்லி 1200 ரூபாய் வரை உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை*
நாளைய தினம் தீபாவளி பண்டிகையை கொண்டாட பொதுமக்கள் தயாராகி வரும் நிலையில். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்றுவட்டார பகுதிகளில் இன்று ஒரே நாளில் திடீரென பூக்களின் விலை கிடு கிடுவென உயர்ந்ததால் திருப்பத்தூர் பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.
தர்மபுரி போச்சம்பள்ளி மத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து வரவழைக்கப்படும் மல்லிகை பூ நேற்று ஒரு கிலோ மல்லி 400 ரூபாய் முதல் 600 ரூபாய் வரை விற்கப்பட்ட நிலையில் இன்று ஒரே நாளில் 1200 ரூபாய் வரை ஒரு கிலோ விற்கப்படுவதால் அந்த மல்லியை வாங்கி முழம் போட்டு விற்கும் சிறு சிறு வியாபாரிகள் ஒரு முழம் 50 ரூபாயிலிருந்து 70 ரூபாய் வரை விற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர் இதனால் பெண்கள் பூ வாங்குவதற்கு தயக்கம் காட்டுவதால் சிறு சிறு வியாபாரிகள் சிரமப்பட்டு வருகின்றனர்.
அதேபோல் செண்டுமல்லி ரோஸ் போன்ற பூக்களின் விலைகளும் கணிசமாக உயர்ந்துள்ளதால் தீபாவளி பண்டிகை நாளிலும் பூ மார்க்கெட் வெறிச்சோடி காணப்படுகிறது.