அதிமுக அமைச்சர் உதயகுமார் மீது உரிமை மீட்பு குழுவினர் புகார்

71பார்த்தது
*முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் வி உதயகுமார் மீது(ஓபிஎஸ் அணியினர்) அதிமுக உரிமை மீட்பு குழுவினர் புகார். *

முன்னாள் முதல்வர் ஓபிஎஸ்ஐ பற்றி பொதுவெளியில் தரக்குறைவாக பேசிய முன்னாள் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் மீது நடவடிக்கை எடுக்க கோரி திருப்பத்தூர் அதிமுக உரிமை மீட்பு குழு மாவட்ட செயலாளர் தலைமையில் மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்.

முன்னால் அதிமுக அமைச்சர் ஆர் பி உதயகுமார் கடந்த 24ஆம் தேதி மதுரையில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் ஓ பன்னீர் செல்வத்தின் வீட்டை நேரில் முற்றுகையிட்டு அவர் எங்கும் நடமாட முடியாதபடி நிலையை தமிழகத்தில் ஏற்படுத்துவோம் என பொதுவெளியில் தரக்குறைவாக பேசியதை கண்டித்து அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் 50க்கும் மேற்பட்ட அதிமுக ஓபிஎஸ் அணி உரிமை மீட்பு குழுவினர் புகார் மனு அளித்தனர்.

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி