எச்ராஜா மீது நடவடிக்கை எடுக்க மனிதநேய மக்கள் கட்சியினர் மனு

77பார்த்தது
*பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா மீது நடவடிக்கை எடுக்கக்கோரி மனிதநேய மக்கள் கட்சி நகர செயலாளர் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் புகார் மனு அளித்ததால் பரபரப்பு. *


சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா அமரன் திரைப்படம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது மனிதநேய மக்கள் கட்சி தலைவர் ஜவாஹிருல்லாவும் விசிக நிறுவன தலைவர் திருமாவளவனும் பச்சை தேச துரோகிகள் என்று கூறியதை தொடர்ந்து தமிழகம் முழுவதும் ஆங்காங்கே மனிதநேய மக்கள் கட்சியை சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் புகார் மனு அளித்து வரும் நிலையில்.


திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் மற்றும் மனித நேய மக்கள் கட்சி சார்பாக நகர தலைவர் அன்வர் பாட்ஷா தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தனர்.

இதனை தொடர்ந்து மனிதநேய மக்கள் கட்சி தலைமை கழக பேச்சாளரும் இஸ்லாமிய பிரச்சார பேரவையின் மாநில பொருளாளருமான சனாவுல்லா கூறுகையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா தொடர்ந்து இதுபோன்று அவதூறு செய்யும் வகையில் பேசி வருகிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருப்பத்தூர் நகர காவல் நிலையத்தில் மனிதநேய மக்கள் கட்சியினர் மனு அளித்தனர்

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி