ஆம்பூரில் கட்டிடப் பணியின் போது மின்சாரம் தாக்கி உயிரிழந்த இளைஞரின் உறவினர்கள் சாலை மறியல் போராட்டம்
கட்டிட உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரி அரசு மருத்துவமனை முன்பு சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் போஸ் என்பவர் கட்டி வரும் கட்டிடத்தில் வாணியம்பாடி மதனாஞ்சேரி பகுதியைச் சேர்ந்த முனுசாமி என்பவரின் மகன் சரவணன்(32) கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்துள்ளார் இந்த நிலையில் வழக்கம் போல் இன்று சரவணன் கட்டிட வேலையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது கட்டிடத்தின் மேலே செல்லும் மின்கம்பி உரசியதில் மின்சாரம் தாக்கி கீழே விழுந்துள்ளார் இதனையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட போது அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் எற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.