இந்தியாவில் ஆதார் அட்டை மிகவும் முக்கியமான அடையாள ஆவணமாக உள்ளது. ஆதார் அட்டை வழங்கப்பட்ட தேதியில் இருந்து ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை உள்ள ஆதார் தகவல்களைப் புதுப்பிக்க வேண்டும். இதன் மூலம் பொது அடையாள தரவு சேகரிப்பு மையத்தில் உங்கள் பற்றிய தகவல்கள் துல்லியமாக இருக்கும். அதன்படி Myaadhaar போர்ட்டல் அல்லது Myaadhaar என்ற செயலியில் சென்று updatedocument என்ற அம்சத்தைப் பயன்படுத்தி நீங்கள் ஆவணங்களைப் புதுப்பித்துக் கொள்ளலாம்