மக்கள் நீதி மய்யம் கட்சியின் 8ம் ஆண்டு தொடக்க விழா சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் நேற்று (பிப்.,21) நடந்தது. அப்போது, “ரசிகர்கள் வேறு, வாக்காளர்கள் வேறு. ரசிகர்கள் வாக்காளர்களாக மாற மாட்டார்கள்” என்றார். இது தவெக விஜய்யை மறைமுகமாக சாடியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அதற்கு தவெகவினர் பதிலடி கொடுத்துள்ளனர். அதன்படி, "ஊழலுக்கு எதிராக தொலைக்காட்சி பெட்டியை உடைத்தவர் இன்று அதே ஊழல் கூடாரத்தில் இளைப்பாறி கொண்டிருக்கிறார்" என கூறுகின்றனர்.