நெமிலி தாலுகா காவேரிப்பாக்கம் அடுத்த களத்தூர் கிராமத்தில் கனமழையால் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதம் அடைந்துள்ளன. இந்த இடத்தை மாவட்ட ஆட்சியர் சந்திரகலா மற்றும் கண்காணிப்பு அலுவலர் லில்லி இன்று (டிசம்பர் 1) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது விவசாயிகள் வேதனையுடன் நெற்பயிரை பிடுங்கி கண்காணிப்பு அலுவலரிடம் காண்பித்து இழப்பீடு வழங்குமாறு கேட்டுக்கொண்டனர்.