ஐ.சி.சி. சாம்பியன்ஸ் கோப்பை கிரிக்கெட் போட்டி பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடந்து வருகிறது. இந்த தொடரின் 4ஆவது லீக் ஆட்டம் லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஆஸ்திரேலிய - இங்கிலாந்து அணிகள் மோதவுள்ளனர். இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்து வீச முடிவு செய்துள்ளது. ஆஸ்திரேலியாவின் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் கூறுகையில், இரவில் பயிற்சி செய்யும் போது சிறிது பனி இருந்ததாகவும், எனவே, அவர்கள் முதலில் பந்து வீச விரும்புவதாகவும் கூறுகிறார். அதன்படி, இங்கிலாந்து அணி பேட்டிங் செய்ய தயாராகி வருகிறது.