மனிதர்களிடையே பரவும் புதிய வகை கொரோனா வைரஸை கண்டறிந்துள்ளதாக சீன வைரஸ் நிபுணர் ஷி ஜெங்லி அறிவித்துள்ளார். இந்த வைரஸ் வௌவால்களிடமிருந்து பரவும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. Covid-19 பாதிப்பை ஏற்படுத்திய வைரஸோடு பல வகைகளில் ஒற்றுமை கொண்டுள்ள இந்த வைரஸுக்கு HKU5 என பெயரிடப்பட்டுள்ளது. காய்ச்சல், இருமல், சோர்வு, தும்மல், பசியின்மை, மூச்சுத் திணறல், வயிற்றுப்போக்கு அறிகுறிகள் ஏற்படும். இந்த வைரஸ் எதிரொலியால் சீனாவில் சில தடுப்பூசி உற்பத்தி நிறுவனங்களின் பங்குசந்தை பங்கு விலைகள் அதிகரித்துள்ளது.