வேலூர் வாக்காளர் அட்டை திருத்தம்: ஆட்சியர் வெளியிட்ட அறிவிப்பு
வேலூர் மாவட்டத்தில் கடந்த 16. 11. 2024 மற்றும் 17. 11. 2024 ஆகிய தேதிகளில் பெயர் சேர்க்க படிவம்-6/ நீக்கம் செய்ய படிவம்-7/ திருத்தம், முகவரி மாற்றம் செய்ய, நகல் அட்டைக்கு விண்ணப்பிக்க மற்றும் மாற்று திறனாளி என்பதைப் பதிவு செய்ய படிவம் -8 ஆகியவற்றில் திருத்தம் மேற்கொள்ள சிறப்பு முகாம்கள் நடைபெற்றது. மேலும் அதன் தொடர்ச்சியாக 23/11/2024 மற்றும் 24/11/2024 ஆகிய இரண்டு அரசு விடுமுறை நாட்களில் அந்தந்த பள்ளி/கல்லூரிகளில் சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளது என ஆட்சியர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.