ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் பகுதியில் பழமை வாய்ந்த மங்கல ஈஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற அன்னாபிஷேகப் பெருவிழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த குமாரமங்கலம் கிராமத்தில் 200 ஆண்டுகள் பழமை வாய்ந்த அருள்மிகு மங்கல நாயகி உடனமர் ஸ்ரீ மங்கல ஈஸ்வரர் ஆலயத்தில் 17 ஆம் ஆண்டு அன்னாபிஷேக விழா நடைபெற்றது முன்னதாக காலை முதலே அபிஷேக ஆராதனை, திருமுறை பாராயணம் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை பூஜைகள் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து சுவாமி திருவீதி உலா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர் இதனை தொடர்ந்து ஆம்பூர் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்திருந்த பொதுமக்கள் மற்றும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது