ஆம்பூர் சுற்றுப்புற பகுதிகளில் மழை
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பஸ் நிலையம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் (இன்று நவம்பர் 4) தற்போது கனமான மழை பெய்து கொண்டிருக்கிறது இதனால் பொதுமக்களும் பஸ் பயணிகளும் மழைக்காக பாதுகாப்பான இடத்தை நோக்கி பயணம் செய்தனர். கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரித்து வந்த நிலையில் இன்று பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.