மாங்கல்யம் மற்றும் குழந்தை வரம் வேண்டி 1008 விளக்கு பூஜை

73பார்த்தது
ஆம்பூர் நாகநாத சுவாமி ஆலயத்தில் மாங்கல்யம் மற்றும் குழந்தை வரம் வேண்டி ஐயப்ப சுவாமிக்கு பெண்கள் 1008 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர்


திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் நாகநாத சுவாமி ஆலயத்தில் கார்த்திகை மாதம் முதல் நாளை முன்னிட்டு சபரிமலை ஐயப்பா சேவா சமாஜம் சார்பில் ஆலயத்தில் காலை முதலே கோபூஜை, 108 கலசாபிக பெருவிழா, ஐயப்ப சாமிக்கு மஹா அபிஷேக ஆராதனை, மஹா பூர்ணாஹூதி, தீபாரதனை, வேதபாராயணம் உள்ளிட்ட பூஜைகளை தொடர்ந்து பெண்கள் மாங்கல்யம் மற்றும் குழந்தை வரம் வேண்டி ஐயப்ப சாமிக்கு 1008 திருவிளக்கு பூஜை செய்து வழிபட்டனர். இதில் ஆம்பூர் மட்டுமல்லாமல் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான ஐயப்ப பக்தர்கள் மற்றும் பெண்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி