ஆம்பூரில் காலனி தொழிற்சாலை தொழிலதிபரிடம் தங்கம் வாங்கித் தருவதாக கூறி 85 லட்சம் மோசடி செய்த நபர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர், வாத்திமனை பகுதியை சேர்ந்தவர் தொழிலதிபர் கலிலூர்ரஹ்மான் (கடந்த 2016 ஆம் ஆண்டு ஆம்பூர் சட்டமன்ற தொகுதியில் ஷு சின்னத்தில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிட்டு தோல்வியடைந்த). இவர் பெரியவரிகம் பகுதியில் நிப்ராஸ் என்ற பெயரில் காலனி தொழிற்சாலை நடத்தி வரும் நிலையில் இவரிடம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு பேரணாம்பட்டு, ரஹ்மானியா தெரு பகுதியை சேர்ந்த தப்ரேஸ் அஹமத் என்பவர் தங்கம் வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் பெற்றுக்கொண்டு மோசடி செய்ததாக கலிலூர் ரஹ்மான் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அளித்த புகாரின் பேரில் மாவட்ட குற்றப்பிரிவு டிஎஸ்பி சுரேஷ் தலைமையிலான குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து தொழிலதிபரிடம் தங்கம் வாங்கி தருவதாக கூறி 85 லட்சம் ரூபாய் மோசடி செய்த தப்ரேஸ் அஹமத் என்பவரை கைது செய்து அவர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு வாணியம்பாடி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைத்தனர்