தாய் வறுமையில் வாழ்ந்த குழந்தைகளை படிக்க வைக்க உதவிக்கரம்

79பார்த்தது
*கணவனை இழந்து வறுமையில் வாழ்வதால் குழந்தைகளை படிக்க வைக்க முடியவில்லை என மனு அளித்த தாய் உடனடியாக நடவடிக்கை எடுத்த மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ். *

திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் திங்கள்தோறும் நடைபெறும் மக்கள் குறை தீர்வு நாள் கூட்டத்தில் வாணியம்பாடி அடுத்த நாராயணபுரம் பகுதியை சேர்ந்த மலர் என்ற பெண் கணவன் இறந்ததால் கடந்த ஒரு வருடமாக வறுமையில் வாடுவதாகவும் தன்னுடைய 10 ஆம் வகுப்பு படிக்கும் மகன் மற்றும் 12 ஆம் வகுப்பு படிக்கும் மகளுக்கு பள்ளி சீருடை கூட வாங்க முடியவில்லை எனவும் இருவரையும் பள்ளிப்படிப்பை நிறுத்த வேண்டிய கட்டாயத்தில் இருப்பதாகவும் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் அவர்களிடம் மனு அளித்தார்

மனுவைப் பெற்ற மாவட்ட ஆட்சியர் குடும்ப சூழ்நிலைகளுக்காக குழந்தைகளின் பள்ளி படிப்பு பாதியில் நிற்க கூடாது என உடனடியாக இருவரையும் அரசு மாணவர் விடுதியில் சேர்த்து அவர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்து கொடுக்குமாறு உத்தரவிட்டார்

மேலும் குறை தீர்வு கூட்ட அரங்கிலேயே இருவருக்கும் சீருடையை வழங்கி பள்ளிப்படிப்பை பாதியில் நிறுத்தக்கூடாது தொடர்ந்து படிக்க வேண்டும் என வலியுறுத்தி படிப்பிற்கு தேவையான அனைத்து வசதிகளையும் தொடர்ந்து கண்காணித்து செயல்படுத்துவதாக உறுதி அளித்தார்

டேக்ஸ் :

தொடர்புடைய செய்தி