ஆம்பூர் அடுத்த நரியம்பட்டில் 23 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அங்கன்வாடி மற்றும் மகளிர் சுகாதார வளாக கட்டிடங்களை எம். எல். ஏ அமலு விஜயன் திறந்து வைத்தார்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த நரியம்பட்டு ஊராட்சியில் ஊராட்சி மன்ற தலைவர் பாரதி ஸ்ரீ தலைமையில் அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் 23 லட்சம் மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்ட அங்கன்வாடி கட்டிடம் மற்றும் மகளிர் சுகாதார வளாக கட்டிடங்களை குடியாத்தம் சட்டமன்றத் தொகுதி எம்எல்ஏ அமலுவிஜயன் ரிப்பன் வெட்டி குத்து விளக்கு ஏற்றி பணிகளை தொடங்கி வைத்தார். முன்னதாக அங்கன்வாடி கட்டிடம் அருகில் புதிதாக கட்டப்பட்ட கோயிலில் முதல் பூஜை செய்து வழிபாடு மேற்கொண்டார். இதனைத் தொடர்ந்து மகளிர் சுய உதவி குழு பெண்கள் மற்றும் அப்பகுதி மக்களுக்கு இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். நிகழ்ச்சியின் போது மாதனூர் மத்திய ஒன்றிய கழக செயலாளர் எம். டி சீனிவாசன், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் சாந்தி சீனிவாசன், வட்டார மருத்துவ அலுவலர் தாரணி, துணைச் செயலாளர் சேகர், மாவட்டப் பிரதிநிதி பொன்ராஜன்பாபு, சின்னவரிகம் ஊராட்சி மன்ற தலைவர் ஷோபனா நவீன்குமார், தலைமைக் கழக பேச்சாளர் பாரதிதாசன், ஒன்றிய குழு உறுப்பினர்கள், தீபா பொன்ராஜன் பாபு, ஆப்ரின்தாஜ், குமரன், கார்த்திக் மற்றும் ஊராட்சி கவுன்சிலர்கள், மகளிர் சுய உதவி குழுவினர் என பலர் கலந்து கொண்டனர்