ஹாஸ்பிடல் திறப்பு விழாவில் மு. தலைமைச் செயலாளர் பங்கேற்பு

63பார்த்தது
வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் புத்தொளி விழா.

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி காசினி ஹாஸ்பிட்டல் அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் புத்தொளி விழா முகல் கார்டனில் உள்ள ப. இராமச்சந்திரா ஆதித்தனார் அரங்கத்தில் நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு காசினி ஹாஸ்பிடல் நிறுவனரும், அல் கௌசர் ஹெர்பல் இன்டர் நேஷனல் ஹாஸ்பிட்டல் & காலேஜ் தாளாளருமான மருத்துவர் ஹகீம் அக்பர் கவுசர் தலைமை வகித்தார். கல்வியாளர் முனைவர் ரத்தின நடராஜன் முன்னிலை வகித்தார். வேலூர் ஶ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவ அதிகாரி டாக்டர் எஸ். ஏ. கே. முதஸ்ஸீர் அர்ஃபாத் அனைவரையும் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் எழுத்தாளர் மற்றும் மூத்த பத்திரிக்கையாளர் ஜே. வி. நாதன், பத்திரிக்கையாளர் வி. கருணாகரன், வழக்கறிஞர் கே. ஏ. கஜேந்திரன், திருவள்ளுவர் பல்கலைகழகம் போர்டு ஆப் ஸ்டடீஸ் (யுனானி) சேர்மன் டாக்டர்
கே. தமீம்உஜ்ஜமா, வேலூர் ஶ்ரீ நாராயணி மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம் மருத்துவ அதிகாரி டாக்டர் கே. ஹீனா கவுஸர், டாக்டர் யாசிர் அர்பாத் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினார்.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக தமிழக அரசு முன்னாள் தலைமை செயலாளர் இறையன்பு கலந்து கொண்டு மாணவர்களுக்கு அறியுறை வழங்கி பேசினார்.

டேக்ஸ் :

Job Suitcase

Jobs near you

தொடர்புடைய செய்தி